இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்த மட்டத்தில் உள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த மே மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 6 சதவீதத்தால் மாத்திரமே குறைந்துள்ளதோடு, இந்திய ரூபாவின் பெறுமதி 11 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ கூறுகையில், இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கத்திற்கான காரணம் உள்நாட்டுக் காரணிகள் அல்ல வெளிநாட்டுக் காரணிகளே என தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள இலங்கை ரூபாவின் வீழ்ச்சி குறித்து அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ உள்ளிட்ட பலர் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -