ஓட்டமாவடி அ.ச.முகம்மது சதீக்-
தரம் நான்கு மாணவர்களினால் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தரம் நான்கில் பணம் என்ற பாட அலகை மையமாகவும் கொடுக்கல் வாங்கல் மூலம் சந்தையின் அனுபவத்தை பெறல் என்ற தேர்ச்சியை அடைவதற்காகவும் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தின் தரம் நான்கின் வகுப்பாசிரியர் ஏ.எச்.ஜவாத் அலி அவர்களினால் இச்சந்தையை ஏற்பாடு செய்திருந்தார்.
இச்சந்தையை அவ்வித்தியாலய அதிபர் யூ.எல்.அகமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்கள் சந்தையில் மிகவும் உற்சாகமாக பொருட்களை ஆசிரியர்களுக்கும் ,மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வியாபாரம் செய்து வியாபாரிகள்,நுகவர்வோர், தொழிலாளர்கள் என்ற அறிவையும் மற்றும் தராசு,கத்தி,கொழுக்கி போன்ற உபகரண பயன்பாட்டையும் மற்றும் சந்தை பற்றிய அனுபவத்தை பெற்றனர்.