அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி சாரதி ஒருவர் கைது


க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் மணல் அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி சாரதி ஒருவரை கைது செய்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் 07.09.2018 அன்று மாலை ஒப்படைக்கப்பட்டதாக தலவாகலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மணல் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனுமதி பத்திரத்தில் திகதி குறிப்பிடப்படாமல் இருந்தமையே இந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறியும் அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 11 ம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -