பஹ்த் ஜுனைட்-
90 வருடகால வரலாற்றை கொண்ட காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 15.08.2018 அன்று பாடசாலை நூலகத்தில் பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலை அதிபருமான அஷ்ஷேய்ஹ் M. அப்பாஸ்(நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது..
90 வருட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் இணைத்து எதிர்வரும் ஆகஸ்ட் 24 திகதி நடைபவனி மற்றும் கெளரவிப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து 90 வருட கால மாணவர்களை ஒன்று சேர்பதுடன் பழைய மாணவர்களை கொண்டு பாடசாலை தற்போதைய மாணவர்களின் கல்வி மேம்பாட்டு மற்றும் பாடசாலை பெளதீக வளத்தை பெற்றுக்கொள்ளல் போன்ற நோக்கத்திற்காக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மேற்படி நிகழ்வு AL - AQSHA WALK TOWARDS THE GOAL என்ற தொனிப்பொருளில் இந் நிகழ்வு முன்னெடுக்கப்படுகிமை குறிப்பிடத்தக்கது.