ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கு அமைவாகவும் கிழக்கு ஆளுனரின் வழிகாட்டலின் கீழும் கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வெள்ளிக் கிழமை (10) மாலை 3.00 மணிக்கு கந்தளாய் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா தெரிவித்தார்.
மூன்றாம் கட்டமாக வழங்கப்படும் இப்பட்டதாரி நியமனங்கள் அண்மையில் போட்டிப் பரீட்சை முலம் தெரிவு செய்யப்பட்ட கட்டம் கட்டமாக நியமனம் வழங்களில் 160 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைப்பார்.கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவின் வேண்டுகோளிற்கிணங்க பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் வழங்கப்படவூள்ளன .மேலும் நிகழ்வில் கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாகம, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹரூப்,எம்.எஸ்.தௌபீக்,சுசந்த புஞ்சிநிலமே,இம்ரான் மஹரூப்,துரைரட்ணசிங்கம் உட்பட மாகாணத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள் மாகாண அமைச்சின் செயலாளர்கள், உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.