கிழக்கு இலங்கையின் முதலாவது பொறியியல் கலாநிதி பட்டத்தை 2004 ஆண்டு தனதாக்கி கொண்ட இவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
University of Ryerson, Toronto, Canada வில் பேராசிரியராகவும்(Proffessor) , இயந்திரவியல் மற்றும் உற்பத்தி பொறியியல் பீட (Mechanical and Industrial Engineering) துணைத் தலைவர் (Associate Chair) ஆகவும் இவர் கடமையாற்றி இருந்தார், இவர் மர்ஹூம் முஹம்மட் இஸ்மாயில் மற்றும் ராஹிலா உம்மா அவர்களின் புதல்வரும், ஹபீல்(UAE), நவ்ஷாட்(UAE) சாம்சுமக்கீன் (சலீம் ஆசிரியர்), Dr. சரீனா(BH AKKARAIPATTU) , சனீரா (Teacher AKP MMC) , ராபியா , பர்னா , கலீனா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடாக, மொறட்டுவை பல்கழைக்கழகத்திற்கு தெரிவாகி 1995 ஆம் ஆண்டில் இளமானி இயந்திர பொறியியலைப் பூர்த்தி செய்தார். பின்னர் புலமைப்பரிசில்களின் ஊடாக முதுமானி பட்டத்தை 1999 ம் ஆண்டு தாய்லாந்திலும் (M.A.Sc. Industrial Engineering, Asian Institute of Technology, Thailand), கலாநிதி பட்டத்தை கனடாவிலும் 2004 ம் ஆண்டு நிறைவு (Ph.D Industrial Engineering, University of Toronto, Canada) செய்தார்.
இவரது 70க்கும் அதிகமான ஆராய்ச்சிகள் உலகின் புகழ் பெற்ற சஞ்சிகைகளில் (finance journals & engineering Journals) வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆண்டு தனது 75 ஆவது ஆராய்ச்சிக்கான பதிப்பை சிங்கப்பூரில் இடம்பெற்ற மாநாட்டில் வெளியிட்டுள்ளதுடன் அதில் நடுவராகவும் பங்குபற்றினார். இவர் உலகின் பல்வேறு சஞ்சிகைகளில் Conference Chair, edirorial board member, Technical Committee member என்பது குறிப்பிடத்தக்கது.
Research Areas
• Real and financial options
• Global supply chain design and risk hedging
• Supply chain contract, Supply chain flexibility
• New product introduction
https://people.ryerson.ca/mmohamad/index.html
https://www.ryerson.ca/mie/directory/faculty/ismail/