எனது கருத்துக்களால் என்னை திட்டுகின்ற, அவமானப்படுத்துகின்ற யார் மீதும் நான் ஆத்திரப்படுவதில்லை என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருப்பதுண்டு. இதற்கு காரணம் எனது எழுத்துக்கள் காலத்தால் உண்மை என நிரூபிக்கப்படுவதை 14 வயது முதலே நான் கண்டு வருவதால் என்னை தூற்றுவோரை நான் குழந்தைகளாகவே பார்க்கிறேன். ஒரு தந்தை தனது பருவமடைந்த மகனுக்கு சொல்லும் விடயங்கள் அவனுக்கு நக்கலாகவே தெரியும். பின்னர் அவனுக்கு காலம் கற்பிக்கும் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று.
இப்படியான நிலைகளில் எனக்கு முஹம்மது நபி (சல்) வாழ்க்கை ஞாபகம் வரும். தாயிப் என்ற ஊர் மக்களுக்கு அவர்களுக்கு சத்தியத்தை சொன்ன போது அந்த மக்கள் சிறுவர்களை ஏவி அன்னாரை கல்லால் அடித்தனர்.
அப்போது வானவர் ஜிப்ரீல் நபியிடம் வந்து இந்த ஊர் மக்களை இப்படி புரட்டிப்போடவா என கேட்டார்.
அப்போது நபிகள் சொன்னார்கள்; வேண்டாம். இந்த மக்கள் என் பேச்சை கேட்காவிட்டாலும் இவர்களின் பரம்பரையாவது கேட்பார்கள் என தெரிவித்தார்கள்.
தன் கருத்து உண்மையானது என்பதில் உறுதி கொண்ட எவரும் தன் கருத்துக்கெதிரான நக்கல் நையாண்டிகள், தாக்குதல்கள், ஏச்சுக்கள் பற்றி கவலைப்பட மாட்டார்.
இதை தெரிந்துதான் ஒரு சிரிப்போடு இவற்றை நான் கடந்து போவேன்.
ஆகவே எனது எழுத்துக்கள் எப்போதும் நேரடியானவை என்பதால் பலருக்கும் மன வருத்தம் வரத்தான் செய்யும். ஆனாலும் அது உண்மையாகும் போது மனம் நெகிழும்.
ஆனாலும் மனவருத்தங்களுக்கு மன்னிப்பு கேட்பதும் மனிதப்பன்பாகும்.
அன்புடன்
முபாறக் அப்துல் மஜீத்