பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த நிருவாக சேவை அதிகாரி எம்.சி.அன்சார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.
நிருவாக சேவை அதிகாரி எம்.சி.அன்சார் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையிலேயே கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் நாளை வெள்ளிக்கிழமை(10-08-2018)தனது கடமையைப் பொறுப்பேற்கவுளார்.இவர் காத்தான்குடி,எறாவூர்,ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி அகமது லெப்பை முகம்மது காசிம் சாலைக்குட்டி சவ்தா உம்மா தம்பதிக்கு முதல் மகனாக மருதமுனையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியலயத்திலும் உயர்கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும் கற்றார்.