ஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு பைசல் காசீம் வழங்கி வைத்தார்


ட்டமாவடி ,மீறாவோடை கிராமிய வைத்தியசாலைக்கு மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக சுகாதார ,போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஒரு கோடி ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி முக்கியஸ்தர் மொஹம்மட் ஹலால்தீனின் கோரிக்கைக்கு அமைய இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை ஒதுக்கியமைக்கான ஆவணங்கள் அனைத்தையும் பிரதி அமைச்சர் பைசல் காசீம் நேற்று [15.08.2018] முஹம்மட் ஹலால்தீன் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அன்வர் ஆகியோரிடம் அவரது அமைச்சில் வைத்துக் கையளித்தார்.

கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம் விரைவில் தொடங்கப்படும்.மேலும்,இந்த வைத்தியசாலையை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை பிரதி அமைச்சர் மேற்கொண்டுள்ளதோடு இது தொடர்பில் தேசிய திட்டமிடல் திணைக்கள அதிகாரிடமும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -