தமிழ் நாட்டின் ஜனநாயக அரசியலில் திராவிடர் முன்னேற்றக் கழகம் முதன்மை வாய்ந்த கட்சியாகும்.
பாரிய வரலாற்று பின்னணியையும் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி போன்ற ஆளுமைகளை தலைவர்களாகக்கண்ட கட்சியாகும். அத்தகைய கட்சிக்கு மு. க. ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டமை அவரது திறமைக்கும் பொறுமைக்கும் பாரிய சவால்களின் போது கட்சியை சரியாக நடத்திய தலைமைத்துவ பன்புகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
இலங்கை முஸ்லிம்கள் மொழியால் தமிழர்கள் என்பதால் தமிழ் நாட்டின் அரசியல் களத்திலிருந்தும் தமிழக மக்களின் அன்பிலிருந்தும் ஒதுங்க முடியாத உறவைக்கொண்டுள்ளவர்கள் என்பதாலும் தி.மு.க தலைவராக மு.க. ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டமையை மகிழ்வுடன் பார்க்கிறோம்.
எதிர் காலத்தில் தி. மு.கவையும் தமிழ் நாட்டையும் அண்ணாவின் கொள்கையின் படி சாதி, சமயம், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றே குலம் என்ற வழியில் ஸ்டாலின், கொண்டு செல்வார் என நாம் எதிர்பார்ப்பதுடன் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் கட்சிகளுடன் நெருங்கிய உறவுகளையும் ஏற்படுத்தி இலங்கை பிரச்சினையில் அனைத்து இனங்களுக்கும் நீதியான தீர்வு கிடைக்க முயற்சி செய்வார் என்றும் எதிர் பார்க்கிறோம்.