மாகாணசபை தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையினை தோற்கடித்து விட்டோம், தலைவர் கடந்த பேராளர் மாநாட்டில் சொன்னதை நிறைவேற்றி விட்டார். தலைவர் எமது சமூகத்தை மாபெரும் அபாயப் பொறியில் இருந்து காப்பாற்றி விட்டார். எமது சமூகத்தின் காவலாளிகள் என எம் சமூகத்தை பல வழிகளிலும் அடகு வைத்து முடித்து விட்ட கட்சிகளின் அதீத ஆதரவாளர்கள் அல்லது நியாயமற்ற முறையில் நாளாந்தம் சமூகத்தை அடகு வைப்பதற்கு உதவி புரிகின்ற அக்கட்சிகளின் ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் முன்வைக்கப்படுகின்ற மேற்குறிப்பிட்டது போன்ற ஆரவாரங்களை கேட்டவுடன் மீண்டும் எமது சமூகம் படுகுழியில் தள்ளப்பட்டு விடுமோ என அஞ்சியே இச்சிறு கட்டுரையினை எழுதுகின்றேன்.
மேற்குறிப்பிட்ட கோஷத்தைக் கேட்டவுடன் மாகாண தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாகவும், புதிய மாகாண சபைத் தேர்தல் சட்டம் தொடர்பாகவும் எனது மனதில் எழுந்த இரு கேள்விகளை அடிப்படையாக வைத்து இக்கட்டுரையினை முன்கொண்டு செல்கின்றேன். அக்கேள்விகளாவன,
எல்லை நிர்ணய அறிக்கை பிழை என்றால் அதற்கு வழிசமைத்த அடிப்படை மாற்றமான மகாணத் தேர்தல் முறை மாற்றச் சட்டம் முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா?
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தோற்கடிக்கப்பட்டவுடன் முஸ்லிம் தலைவர்களால் வரிந்து வாங்கப்பட்ட முஸ்லிம்களுக்கான ஆபத்து தடுக்கப்பட்டு விட்டதா?
எல்லை நிர்ணய அறிக்கை பிழை என்றால் அதற்கு வழிசமைத்த அடிப்படை மாற்றமான மகாணத் தேர்தல் முறை மாற்றச் சட்டம் முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா?
கொண்டு வரப்பட்ட 2017ஆம் ஆண்டின் 17ஆம்; இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையுமென பல்வேறு தரப்புக்கள் முஸ்லிம் பாராளுமன்ற உருப்பினர்களை நோக்கிக் குரலெழுப்பி வந்தன. அதற்கான முக்கியமான, நியாயமான காரணங்களும் காணப்பட்டன. அவற்றில் முக்கிமானது;
1) தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் புதிய முறை முஸ்லிம்களுக்கு ஓரளவு சாதகமாக் அமையலாம்.
2) மேற்குறிப்பிடப்பட்டதை விட ஏற்கெனவே அமுலில் இருந்த விகிதாசார முறையே அதிக நன்மை பார்க்க கூடியமுறை என்பது கடந்த காலத் தேர்தல்களில் மூலம் நிருபிக்கப்பட்டமை: இம்முறையானது 43 ஆக காணப்பட்ட மாகனசபைப் பிரதிநிதித்துவத்தை 13 ஆகக் குறைத்துவிடும் என்கின்ற அச்சம் காணப்பட்டது. இதனை நிருபிக்கும் வகையில் மறைந்த கல்விமான் மகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் மர்ஹூம் எஸ். ஹெச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் இதனை தனது குழுவின் அறிக்கை சமர்ப்பித்ததன் பிறகு குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று தாம் எல்லை நிர்ணய அறிக்கையினை தோற்கடித்துவிட்டோமென வீராப்புப் பேசுகின்ற இத்தலைவர்கள் அன்று இவ்ஆபத்தினை அறிந்திருக்கவில்லையா? அவ்வாறு அன்று இவர்களின் வாக்குகளினால் பாராளுமன்றத்தில் இத்திருத்தத்தினை அங்கீகரிப்பதற்கு முதல் இதன் ஆபத்தை அறிந்திருக்கவில்லையா? அல்லது அக்சட்ட நகலை வாசிக்கவில்லையா? அல்லது வாசித்து விட்டுத்தான் ஆதரவளித்தார்களா? அவசரமாக மாற்றங்கள் செயப்பட்டாலும் வாசிக்காமல் வாக்களித்தார்கள் என்றால் அது முளுச்சமூகத்திற்குமான அவமானமாகும். ஏனெனில் இப்படியான தலைவர்களையா நாம் பாரளுமன்றத்த்துக்கு அனுப்பியுள்ளோம் என்று பார்கின்றபோது எமது தெரிவுகள் பிழை என்பதையிட்டு நாம் வெட்கமடையத்தான் வேண்டும். ஆனால், இவர்கள் இத்திருத்த நகலை வாசிக்காமல் பாராளுமன்றத்தில் வாக்களித்தார்கள் என்பதுவும் ஒரு பொய்யான புரளியே. ஏனைய சிங்கள, தமிழ் இனப் பாரளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாக வாசித்துவிட்டு வாக்களித்தபோது ஏன் இவர்களால் முடியாமல் போனது. எல்லாமே இவர்களுக்குத் தெரிந்தே நடந்துள்ளது எனலாம். எனவே, இங்கு திட்டமிடப்பட்டு ஒருசமூகத்தின் உரிமை அச்சமூகத்தின் தலைவர்களின் உதவுயுடன் பறிக்கப்பட்டுள்ளதென்லாம். எனவே இம்மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை எமது உரிமைகளின் காவலன் என்று சொல்லப்படுகின்ற இத்தலைவர்களால் பாரிய கிடங்கில் நாம் எல்லோரும் திட்டமிடப்பட்டு தள்ளப்பட்டுள்ளோம். இவைகள் எல்லாவற்றையும் மறைத்து எமது கண்களை அவர்களது கைகளால் குத்திவிட்டு இன்று அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்கின்ற மாயையைக் காட்டி மீண்டும் மயக்க வலம் வருகின்றனர். பிழைகள் செய்தாலும் எமக்குத் தலைவன்தான் வேண்டும் என்கிண்ற விடாப்பிடியான ஆதரவாளர்கள் தமது சொந்த மூளைக்கு சற்று வேலை கொடுக்கவேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள். எனவே, கடந்த பாராளுமன்றத்தில் எமது தலைவர்கள் சேர்ந்து தோற்கடித்த மாகாண தொகுதி நிர்ணய அறிக்கையுடன் தாம் ஆதரித்த அச்சட்டமும் எமது சமூகத்துக்கு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தி விட்டனர். தயவு செய்து உங்களது வீராப்பு வசனங்களை அடக்கி வாசியுங்கள். சமூகத்தைக் காட்டிக்கொடுப்பதிலிருந்து ஓய்வெடுங்கள்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தோற்கடிக்கப்பட்டவுடன் முஸ்லிம் தலைவர்களால் வரிந்து வாங்கப்பட்ட முஸ்லிம்களுக்கான ஆபத்து தடுக்கப்பட்டு விட்டதா?
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேள்விக்கு இல்லை என்றே நேரடியாகப்பதில் சொல்லலாம். ஏனெனில் புதிய மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின் 12,13,14,15 ம்பிரிவுகளில் சட்டமாக்கப்பட்டுள்ள விடயங்களை உற்றுநோக்குகின்றபோது அறிக்கை தோற்கடிக்கப்பட்டால் பிரதமரின் தலைமையில் ஐந்துபேர் கொண்ட மீளாய்வுக்குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்பிக்கவேண்டும். இம்மீளாய்வுக்குழு அறிக்கையை ஜனாதிபதி ஆராய்ந்து அதனைப் பிரகடனப்படுத்தமுடியும்.
ஆக,இம்மீளாய்வுக்குழு மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்த வகையிலும் அதிகரிக்கமுடியாது என்பதையும் எதனைசெய்யமுடியும் என்பதையும் பின்வருமாறு கூறுகின்றது.
13) மீளாய்வுக்குழு ஏதேனும் தேர்தற்தொகுதியின் பெயர்கள், இலக்கங்கள் மற்றும் எல்லைகளுக்கான ஏதேனும் மாற்றம் செய்யப்படுவதனை செய்வித்தல் வேண்டும்
எனவே, இனி இவர்கள் அதாவது எமது உரிமைகளின் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசும் இவர்களால் எதுவும் செய்யமுடியாது என்பதே இதன் அர்த்தமாகும். ஜனாதிபதி வர்தமானியினூடாக தொகுதிகளைப் பிரகடனப்படுத்தினால் புதிய முறையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும். மிக லாவகமாக, பெரும்பான்மைக் கட்சிகளுக்கு எதுவித சேதாரமுமின்றி வழமை போன்று எம் சமூகத்தின் மற்றுமொரு எதிர்கால இருப்பினை கேள்விக்குறியாக்கி மற்றுமொரு உரிமையினை 2017. செப்தெம்பர்,21ம் திகதி அகாலமரணமடையசெய்துள்ளனர். அவர்களுக்கு இவைகளைப் பற்றிக் கவலைப்படுகின்ற மூளையின் பகுதி எப்பொபொழுதோ செயலிழந்து விட்டது. எமது சமூகத்தின் உரிமையை அகாலமரணமடையச் செய்த இத்தலைவர்களை இன்னும் நாம் பொன்னாடை போர்த்தி, மாலை போட்டு, வாக்கும் போட்டு, சிம்மாசனத்திலும் ஏற்றிப் பார்க்கிறோம் என்றால் எம்மை அப்ப்பாவிவகல்ள் என்று சொல்வதா? முட்டாள்கள் என்பதா. எமக்கு நாமேதான் குற்றவாளிகள். நாளைய பரம்பரை படிப்பதற்கு அவர்கள் எவாறு கொத்தடிமைகளாக்கப்பட்டனர் என்கின்ற சரித்திரத்தை மட்டுமே நாம் விட்டுவைக்கப்போகின்றோம். ஆனால், இத்தலைவர்கள் ஒரு சமூகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு இவர்கள் அடைந்துள்ள லாபம் என்னவென்பதை எம்சமூகத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற ஒவ்வொரு நபரும் சிந்திக்கவேண்டும். இன்று நான் எழுதுகின்ற இகட்டுரையை ஒரு கட்டுரையாக மட்டும் வாசிக்காதீர்கள். ஒரு சமூகத்தின் உரிமை, அச்சமூகத்தின் காவலர்களாலேயே களவாடப்பட்டு இன்னொரு சமூகத்திற்கு விற்கப்பட்ட ஒரு துக்ககரமான கதை. தயவு செய்து எனது எழுத்துக்களுக்கு அரசியல் கண்ணாடி போட்டுப்பார்க்கவேண்டாம். சமூகக் கண்ணாடியூடாகப் பார்க்கவும். இதுவும் ஒரு அத்திப்பட்டியின் கதைதான்.