தலைவர் றியாழைப் புகழ்ந்ததன் எதிரொலியே பகிஸ்கரிப்புக்கான அறிக்கை


எஸ்.ஐ.முஹாஜிரீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மாநாடு எதிர்வரும் 05.08.2018 அன்று கண்டி பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் நடைபெற இருக்கிறது.

இம்மாநாட்டையொட்டி வழக்கமாக நடைபெறகின்ற கட்சியின் கட்டாய உயர்பீட கூட்டத்தின் போது கட்சியின் தேசியத்தலைவர் அல்ஹாஜ் கௌரவ ரவூப் ஹக்கிம் அவர்கள் உரையாற்றினார்கள்.

அந்த உரையில் கல்குடாவின் அமைப்பாளர் ரியாழ் அவர்களின் வருகைக்குப் பின்னர் கல்குடாவிலே கட்சியின் பெருபேறுகள் அதிக வளர்ச்சியை காட்டுகிறது.

அதாவது ஓட்டமாவடி பிரதேச சபையில் ஏற்கனவே ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார்.

ஆனால் தற்போது ரியாழ் அவர்களின் கடின உழைப்பால் எட்டு உறுப்பினர்கள் அதாவது சபையில் பெரும்பாண்மையானவர்கள் கட்சியின் உறுப்பினர்களே என்றும், மேலும் வாழைச்சேனை பிரதேச சபையிலே ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியும் கட்சிக்கே கிடைத்திருக்கிறது என்றும் வாயாரப் புகழ்ந்தார்.

இந்த புகழ்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத அயலுார் அரசியல் வாதிகள் அதாவது வழமையாக கல்குடாவிலே முகவர்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதி தமது அடிவருடிகளை துாண்டி விட்டு தற்போது மாநாட்டை போராளிகள் பகிஸ்கரிப்பதாக பொய்யான செய்திகளை இணையத்தளங்களில் பரப்பிவிட்டுருக்கின்றார்.

ஆனால் கல்குடாவில் உள்ள போராளிகள் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் மாநாட்டில் கலந்து கொள்ளுமுகமாக பல்வேறு ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கின்றனர்

கடந்த காலங்களிலே அரசியல் அதிகாரத்தில் இருந்த கட்சியின் ஒரு முக்கியஸ்தர் தற்போதும் கல்குடாவிலே கால் ஊன்றுவதற்காக தனது அடிவருடிகளை துாண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை இனியும் கல்குடா போராளிகள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. என்றும் கல்குடாவையும்,அமைப்பாளர் ரியாழ் அவர்களையும் நேசிக்கும் கட்சியின் உண்மையான போராளிகள் தேசிய தலைவர் அவர்களிடம் இந்தவிடயம் சம்பந்தமாக முறையிட இருக்கின்றனர். எது எவ்வாறு இருப்பினும் கட்சியின் பேராளர் மாநாட்டுக்கு கல்குடாவின் உண்மைப் போராளிகள் கலந்து கொள்வது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -