கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ,தலைமையையும், கட்சியையும் பாதுகாப்பது போராளிகளின் தார்மீக பொறுப்பாகும்… நாபீர் பெளண்டேசன்.


டந்த சில வருடங்களில் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர் நோக்கியுள்ள பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கும், அரசியல் ரீதியாக திட்டமிடப்பட்டு முஸ்லிம்களின் இருப்பிடத்திற்கு வைக்கப்படும் வேட்டுக்களுக்கும் நிரந்த தீர்வை நோக்கிய பயணத்தில் வெற்றியடைவதென்றால்.! அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை புறம்தள்ளி வைத்து விட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினையும் ,அதன் தலைமையுமான அப்துர் றவூப் கிபத்துல் ஹக்கீமையும் பாதுகாப்பது போராலிகளின் தார்மீக பொறுப்பென சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த நாபீர்……..முஸ்லிம்களின் இருப்புக்களை பேரினவாதிகளின் கைகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக அவர்களுக்கு பின்னால் நின்று முஸ்லிம்களின் அரசியல் பாதுகாவலர்கள் என்ற போர்வைக்குள் செயற்படும் கைகூலிகளின் ஊடுறுவல்களுக்கு செவிசாய்க்காமல் எதிரே வருகின்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும், போராலிகளும் இதைய சுத்தியுடனும், ஒற்றுமையுடன் செயற்பட்டு கட்சியையும், அதன் தலைமையும் பாது காப்பதோடு சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரசினுடைய இருப்பினை பாதுகாப்பதும் போராலிகளின் கைகளிலே இருக்கின்றது என தெரிவிக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -