அட்டன் நகரில் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது


க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் 410 மில்லிகிராம் போதை பொருளுடன் ஒருவர் 08.08.2018 அன்று இரவு 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் உடம்பில் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த போது குறித்த போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதை பொருள் வர்த்தகம் மிகவும் சூட்சபமான முறையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அட்டன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் 09.08.2018 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -