இலங்கை கல்வி நிருவாகசேவை தரம்1ற்கு 79பேர் பதவியுயர்வு!


51சிங்களவர்:20தமிழர்கள்:08முஸ்லிம்கள் : 1.1.2013முதல் அமுல்!
காரைதீவு நிருபர் சகா-
லங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் தரத்திற்கு நாடளாவியரீதியில் 79 கல்வி அதிகாரிகள் முதற்கட்டமாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கல்வி நிருவாகசேவையின் இரண்டாந்தர அதிகாரிகளான இவர்கள் நாடாளாவியரீதியில் மாகாண வலய கல்விப்பணிமனைகளில் கடமையாற்றிவந்தனர்.
அரசசேவை ஆணைக்குழுவின் கடிதப்;பிரகாரம் கடந்த 01.01.2013முதல் இவர்களது பதவியுயர்வு அமுலுக்கு வருகின்றது.

பதவியுயர்த்தப்பட்ட 79பேரில் 51சிங்கள 20தமிழ் 08முஸ்லிம் கல்வி அதிகாரிகள் அடங்குகின்றனர்.
பதவியுயர்த்தப்பட்ட 20தமிழ் அதிகாரிகளின் பெயர்வருமாறு:
எஸ்.மனோகரன் என்.விஜேந்திரன் வீ.மயில்வாகனம் கே.சத்தியநாதன்; எம்.உலகேஸ்பரம் என்.தெய்வேந்திரராஜா எம்.இராதாகிருஸ்ணன் வை.ரவீந்திரன் எஸ்.புஸ்பலிங்கம் எஸ்.சுந்தரசிவம் எஸ்.நந்தகுமார் ஏ.ஸ்ரீஸ்காந்தராஜா கே.வரதராஜமூர்த்தி; ஏ.இளங்கோ ரிஜே.குயின்ரஸ் திருமதி எல்.எம்.வினிற்றன் திருமதி எஸ்.எஸ்.செபஸ்ரியான் திருமதி பி.கணேசலிங்கம் ஏ.நளினி திருமதி பி.இராமநாதன்

பதவியுயர்த்தப்பட்ட 08முஸ்லிம் அதிகாரிகளின் பெயர்வருமாறு:
எம்.எஸ்.அப்துல் ஜலீல் எம்.எம்.சியான் எம்.ஜ.எ.முத்தலிப் எ.எல்.எம்.காசிம் பி.எம்.நசீர் எம்.ஜ.சேகுஅலி திருமதி எம்.எம்.மன்சூர் திருமதி எம்.ரி.எஸ்.பாஸியா.

பதவியுயர்வு பெற்றவர்களில் 11பேர் ஓய்வுபெற்றவர்களாவர். அறுவர் இவ்வாண்டுக்குள் ஓய்வுபெறவிருப்பவர்களாவர்.
இவர்கள் அனைவரும் 4.1.1999இல் இ.க.நி.சேவை தரம் 3இல் நியமனம் பெற்று பத்து வருடங்களின் பின்னர் 4.1.2009 இல் இ.க.நி.சேவை தரம் 2இல் நியமனம் பெற்றவர்களாவர்.
இது முதற்கட்டமாக வழங்கப்படுகின்ற பதவியுயர்வாகும். தேவையான தகைமையைப்பூர்த்திசெய்தபிற்பாடு இன்னும் சிலருக்கு பின்னர் வழங்கப்படவிருக்கின்றதாகத் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -