ஊடகவியலாளர் சாமர லக்ஸான் குமாரவின் மரணத்துக்கான இரங்கள் செய்தி


'டகத்தின் வாயிலாக இன உறவைக் கட்டி எழுப்புவதற்கும் அணைத்து இன மக்களிடையே தேசப்பற்றை விதைப்பதற்கும் பாடுபட்ட ஊடகவியலாளர் சாமர லக்ஸான் குமாரவின் மரணம் ஊடகத் துறைக்கு மாத்திரமன்றி முழு நாட்டுக்குமே பேரிழப்பாகும். இன உறவைக் கட்டி எழுப்புவதற்காகப் பாடுபடும் எம்போன்ற அரசியல் தலைவர்களுக்கு இவரது மரணம் பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது''

-இவ்வாறு சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

அனைத்து இன மக்களையும் இலங்கையர் என்ற அடையாளத்தோடு ஒன்றிணைத்துக்கொண்டு எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.இதற்கான வழிகாட்டல்களைச் செய்ய வேண்டியது ஊடகவியலாளர்கள்தான்.அந்தப் பணியை செவ்வனே மேற்கொண்டவர்தான் மறைந்த ஊடகவியலாளர் சாமர லக்ஸான் குமார.

சில ஊடகங்கள் இனங்களிடையே இனவாதத்தை விதைத்து இந்த நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இன்றைய ஆபத்தான சூழலில் இந்த நாட்டைப் பற்றியும் இந்த நாட்டில் வாழும் மக்கள் பற்றியும் சரியான முறையில் சிந்தித்து செயற்பட்ட ஊடகவியலாளர்தான் சாமர.
அவரது இந்த தேசப்பற்றும் இன ஒற்றுமையை வளர்க்கும் மனப்பாங்குமே அவர் இளவயதில் 'சிலுமின' மற்றும் 'ரெச' பத்திரிகைகளுக்கு ஆசிரியராக வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தன.மிகக் குறுகிய காலத்துக்குள் இந்த உயர் பதவியை அடையும் அளவுக்கு அவர் மிகச் சிறந்த திறமைசாலியாகத் திகழ்ந்தார்.

இந்த நாட்டை உண்மையாக நேசித்த-இன உறவைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபட்ட இந்த ஊடகவியலாளனின் இறப்பு உண்மையில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.ஊடகத் துறைக்கும் இந்த நாட்டுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ள அவரது மரணத்தால் நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.
அவரது பிரிவால் வாடும் அவரது மனைவி,பிள்ளைகள்,உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.-எனத் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -