திருகோணமலை பதவிசிறிபுர ஜயந்தி ரஜ மஹா விகாரைக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் பாரியார் தீப்தி போகொல்லாகம இன்று (இருபத்தாறாம் திகதி) விஜயமொன்றினை மேற்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான பதவிசிறிபுர கிராம மக்கள் தங்களின் கிராமத்தின் குடிநீர் பிரச்சினை, வீதி நிர்மாணிக்கப்படாமை மற்றும் சிறுநீரக நோயாளர்களின்
பிரச்சினைகளஞக்கு தீர்வுகளை வழங்குமாறு கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட வேண்டுமென்ற நோக்குடன் கொழும்பிலுள்ள சக தனவந்தர்களுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்து முதல் கட்டமாக அங்குள்ள விகாரையை பார்வையிட்டார்.
விகாரையை புணரமைப்பு செய்வதற்காக உதவிகளை வழங்குமாறு விகாரை நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கையினையடுத்து தனது சொந்த நிதியிலிருந்து ஒரு இலச்சம் ரூபாயினையும் வழங்கி வைத்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் பதவிசிறிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீருவுகளை வழங்குவதாகவும் விகாரையை புணரமைப்பதற்கு இன்னும் நிதியுதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதில் பதவிசிறிபுர பிரதேச சபை தலைவரும் பங்கேற்றதுடன் பிரதேசத்தின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.