ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது சங்கர மணிவண்ணண் தெரிவிப்பு


நோட்டன் பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
சிரியர் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.

25.07.2018 ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் வழங்கப்படவிருந்த 1014 பேருக்கான நியமனத்தை நிறுத்துவதாக அறிவித்ததையடுத்தே மேற்படி போராட்டம் கைவிடப்பட்டுள்ளது .

கல்வி அமைச்சினால் அரசியல் பழி வாங்கும் வகையில் வழங்கபப்படவிருந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 26.07.2018 நாடளவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கங்ளினால் சுகவின விடுகை போராட்டமொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த போராட்டத்திற்கு மலையக பெருந்தோட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்கள்தமது ஆதரவை வழங்க முன்வந்தது

இந் நிலையில் 25.07.2018 ஜனதிபதி மாளிகையில் கல்விசார் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் தெரிவு செய்யப்பட்டுள்ள நியமன பெயர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளனவா? என்பதை அறிய மூவரடங்கிய குழுவை நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் மேற்படி போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சங்கரமணிவண்ணன் தெரிவித்தார். மேலும் போராட்டத்திற்கு ஆதரவு நல்க முன்வந்த ஆசிரியர்
கல்விச்சமூகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -