-ஆயிலியடி மதீனா விளையாட்டு கழகத்தின் இறுதிச் சுற்றுப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருப் பிரதம அதிதி-
ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா ஆயிலியடி மதீனா விளையாட்டு கழகத்தினால் 57 ஆவது போட்டியை முன்னிட்டு மதீனா கிண்ணத்திற்கான உதைப் பந்தாட்டப் போட்டி யொன்று நேற்று முன்தினம் (28) சனிக்கிழமை மாலை ஆயிலியடி மதீனா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி அமைச்சின் கண்கானிப்பாளரும், மூதூர் தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமாகிய இம்ரான் மகரூப் , மற்றும் வான் எல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ. அர்ஜுன கொடிக்கார, தி/கிண்ணியா வான் எல புஹாரி மாகாவித்தியாலய அதிபர், ஏ.எஸ். ஜாபீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாரிப் லெப்பை, கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான என்.எம்.நபீரா, ஏ.கே. அனிபா, மைதான தலைவர் ஏ. ஜெய்னுதீன் செயலாளர் எஸ்.எம். ஸிஹாஜித் நானும் ,எம்,அன்சார் ,பரீனா மல்டி சொப் உரிமையாளர் எஸ், நஜிம் அன்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
இவ் போட்டியில் கிண்ணியா கற்குழி ஜங்வேர்ட்ஸ் விளையாட்டு கழகமும், முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகமும் மோதி 2 : 1 என்ற கோல்களின் அடிப்படையில் ஈச் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகியது.
இதில் வெற்றி பெற்ற ஈச் விளையாட்டு கழகத்திற்கு வெற்றி கிண்ணத்தையும், ரூபா 25 ஆயிரம் பணப்பரிசையும் கைப்பற்றியது.
இப் போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக ஏ.எஸ்.நதீர் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது ஆயிலியடி மதீனா விளையாட்டு மைதானத்திற்கான சுற்று வேலி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் பன் முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 7 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மைதானத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளதோடு , அதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
தி/ கிண்ணியா வான் எல புஹாரி மாகாவித்தியாலயத்தில் 12 வயதுக்கு உற்பட்ட மைலோ பாசிர்லோனா தேசிய மட்டத்திற்கு தெரிவு செயப்பட வீரர்களுக்கும், குண்டு போடுதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செயப்பட வீரர்களுக்கும் கெளரவிப்பு நிகழ்வும் கிண்ணம்,பதக்கம், சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது
கிண்ணியா ஆயிலியடி மதீனா விளையாட்டு கழகத்தின் செயலாளர் எஸ்.எம். ஸிஹாஜித் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துக்கொண்டார்.