ஏறாவூர் பிரதேச செயலக திறப்பு விழா இன்று

ஏறாவூர் றிபாய்-
29-07-2018 ஞாயிற்றுகிழமை இன்று நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஏறாவூர் பிரதேச செயலகத்தின் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் உள்நாட்டு அலுவலக அமைச்சர் வஜீர அபேவர்த்தன மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்  ZA.ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் , மற்றும் ஏறாவூர் நகர சபை தவிசாளர்உட்பட அனைத்து பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் உரையாற்றுகையில்
எமது பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உடனடி தீர்வை வழங்க வேண்டும் என்று கௌரவ பிரதமரிடம் தெரிவித்தார்.
சிறந்த வடிகாண் திட்டம் இல்லாததால் அடைமழை காலங்களில் மக்கள் பெரியதோர் அசௌகரியகங்களை எதிர்நோக்குகின்றனர்
இதனை கருத்தில்கொண்டு சிறந்த வடிகாண் திட்டத்தை எமதுபிரதேசத்தில் முழுமைப்படுத்த வேண்டும் அடுத்து திண்மக்கழிவுகள் வாவிக்கரை ஓரங்களில் குவிக்கப்பட்டு அவ்விடம் மக்களின் பார்வையில் இருந்து மறையும் சந்தர்பத்தில் சுற்றுலாமையம் அவ் இடத்தில் கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் என்னால் சில திட்டங்களை முன்வைத்திருக்கின்றேன்
அதனை முற்றுமுழுதாக உங்கள் கவணத்தில் எடுத்து வாவிக்கரை ஓரம் சிறந்த சுற்றுலா துறையாக மாற்றித்தர வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்தார் .
மேலும் மாகாணசபை கலைக்கப்பட்டு 10மாதங்கள் சென்றும் இதுவரைக்கும் அடுத்த கட்ட நகர்வை எதிர்நோக்காமல் இருப்பது ஜனநாயக ஆட்சிக்கு நல்லதல்ல  அடுத்த மாகாணசபை தேர்தலை வெகுவிரைவில் நடத்தவேண்டும் அதுவே கிழக்கு மக்களுக்கு உகந்தது என்று சுட்டிக்காட்டினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -