நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு


க.கிஷாந்தன்-
நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மண்சரிவு 03.06.2018 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு லிந்துலை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -