உண்மையில் பிறை என்பது உலகம் முழுவதும் ஒன்றுதான். உலகளாவிய முஸ்லிம் சமூகத்தை பார்த்து "பிறை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறை கண்டு விடுங்கள்" என எக்காலத்துக்கும் ஏற்ற அபூர்வமான வசனத்தை எமக்கு சொன்ன நபியவர்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இன்றைய இந்த நோன்புப்பெருநாள் உலகளாவிய முஸ்லிம்களின் ஒற்றுமையை காட்டுகிறது. ஒரு சில நாடுகளின் சமயத்தலைவர்கள் இன்னமும் சத்தியத்தை விளங்காத நிலையில் இருந்தாலும் நிச்சயம் உலகமெலாம் ஒரு பிறைதான் என்ற உண்மையை புரியும் காலம் விரைவில் வரும்.
இன்றைய பெருநாளில் உலகளாவிய முஸ்லிம்களின் ஒற்றுமைப்பலத்துக்காக நாம் பிரார்த்திப்பதுடன் முஸ்லிம்கள் மத்தியில் ஆயுத மோதல்கள் நீங்கி சமாதானமும் "நாம் முஸ்லிகள்" என்ற ஒற்றுமையும் ஓங்க அனைவரும் ஒன்று படுவோம்.