இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் எமது நாட்டை வலுவான, பன்முகமான நாடாகவும், சகல மக்களும் சலக விதமான உரிமைகளுடன் தங்களுடைய சொந்த இருப்புக்களில் தாங்கள் விரும்பிய ஆரசியல் அபிலாசைகளை பெற்று நிமதியாக வாழ்வதோடு சகலருக்கும் உதவ வேண்டும் என சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தனது நோன்பு பெரு நாள் வாழ்த்து செய்தியில் மேற் கண்டவாறு தெரிவிக்கின்றார்.
மேலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் ரமழான் மாதத்தினை முடித்து பெருநாளை கொண்டாட ஆரம்பித்துள்ளீர்கள். ரமழான் என்பது இஸ்லாமிய சமூக மக்களுக்கு வருடத்தின் புனிதமான காலமாகும். நமக்கு தரப்பட்டுள்ள பரிசுகளுக்காக நாம் மற்றவர்களை பாராட்ட வேண்டும் என்பதை ரமழான் எமக்கு நினைவூட்டுகிறது’ என குறிப்பிட்டுள்ள உதுமான் கண்டு நாபீர்…………..
இலங்கை எனும் எமது நாடானது பலவிதமான கலாச்சாரங்கள், பண்பாடு,என பல்லின மக்கள் நம்பிக்கையுடன் வாழ சிறந்த இடமாக இருப்பதற்கு ஒட்டுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களும் இந்த சந்தோசமான புனித நாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.