பிரதேச வேறுபாடுகளை மறந்து சகோதர வாஞ்சையோடு ஒரு மண்ணின் மக்களாக ஒன்றிணைந்து வாழ்வதற்கு வழி பிறக்கவேண்டும் - தொழிலதிபர் எம்.எஸ்.எம்.முபாறக்


றியாத் ஏ. மஜீத்-
ன ஐக்கியம், சகோதரத்துவம், மண் வாசனை என்பன நம் ஒவ்வொருவரினதும் உள்ளங்களில் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் முஸ்லிம்சமூகம் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுகின்ற நன்னாளாகவும் புனித நோன்புப் பெருநாள் அமையவேண்டுமெனபிரார்த்திப்பதாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவர் தொழிலதிபர் எம்.எஸ்.எம்.முபாறக் தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச வேறுபாடுகளை மறந்து சகோதர வாஞ்சையோடு ஒரு மண்ணின் மக்களாக ஒன்றிணைந்து வாழ்வதற்கும் முஸ்லிம்களுக்குஉலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் நீங்கி ஒற்றுமைப்படுவதற்கும் இப்புனித பெருநாள் தினத்தில் அனைவரும் பிரார்த்திக்ககடமைப்பட்டுள்ளோம்.

நோன்பு காலத்தில் எம்மில் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் புனித நோன்புப் பெருநாள் தினத்தோடு நின்றுவிடாமல் எமது வாழ்நாள் முழுவதும்தொடர்வதற்கும் நோன்பு காலத்தில் செய்த நல்லமல்கள் இறை ஏற்றத்தைப் பெற்று மறுமையில் ஈடேற்றத்தை பெறுவதற்கும் இறைவன்அனைவருக்கும் அருல் புரிய வேண்டுமெனவும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவர் தொழிலதிபர்எம்.எஸ்.எம்.முபாறக் கேட்டுக்கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -