புரட்சி எழுத்தாளர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “முகநூலில் நான்” பல்சுவை நூல் வெளியீட்டு விழா!!! (படங்கள்)

எம்.வை.அமீர்,றியாத் ஏ. மஜீத்,யூ.கே.காலித்தீன்-
சாய்ந்தமருதின் புரட்சி எழுத்தாளர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “முகநூலில் நான்” பல்சுவை நூல் வெளியீட்டு விழா (27-06-2018) மாளிகைக்காடு றிபா மண்டபத்தில் தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.றமீஸ் தலைமையில் இடம்பெற்றது.

மாநகரசபை உறுப்பினர்கள் கல்வியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் என பலரும் குழுமியிருந்த குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன், தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம பொறியிலாளர் எம்.ஆர்.பர்ஹான்,கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் ஆசிரிய ஆலோசகர் எழுத்தாளர் எஸ்.எல்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகநூலின் பயன்பாட்டினை தத்ரூபமாக சான்றுப்படுத்தும் வகையில் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய 'முகநூலில் நான்' எனும் குறித்த பல்சுவை நூல் வெளியிட்டு நிகழ்வுவை சாய்ந்தமருது பிறைட் பியுச்சர் பவுண்டேஷன் நடாத்தியது. .அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.நயீம் ஆசிரியர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.














































எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -