கொழும்பு இந்து இளைஞா் மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன முன்னாள் பணிப்பாளா் நாயகம் வி.என் மதிஅழகனின் ”சொல்லும் செய்திகள்” நுால் வெளியீடு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று(24) வெளியீட்டு வைக்கப்பட்டது. அவரது 45 வருட கால இத்திரனியல் தமிழ் ஊடக வரலாற்றில் முதலாவது செய்தித்துறை கருவி நுாலாகும். இந் நிகழ்வு கொழும்பு இந்து இளைஞா் மன்றத்தின் தலைவா் தே. செந்திவேலா் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேசன், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினா் கலாநிதி எஸ் எம் இஸ்மாயில் கலந்து கொண்டனா் நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.
இந் நிகழ்வில் வாழ்த்துக்கள் ஆசியுரைகள் நுால் விமா்சனங்களும் இடம்பெற்றன . மண்டபம் நிறைந்து ஊடகவியலாளா் இலக்கியவாதிகள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் சக அறிவிப்பாளா்கள் கலந்து கொண்டனா். இங்கு . உலக அறிவிப்பாளா் பி.எச். அப்துல் ஹமீத், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் தமிழ் பணிப்பாளா் எஸ்.விஸ்வநாதன்,கவிஞா் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், தே. செந்தில்வேலா், மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கரா, பேராசிரியா் எஸ் தில்லைநாதன், உடுவை தில்லை நடராஜா, அமைச்சா் மனோ கனேசன், பாராளுமன்ற உறுப்பிணா் கலாநிதி எஸ்.எம் இஸ்மாயில் ஆகியோறும் மதிஅழகன் பற்றியும் வாழ்த்துக்களையும் ஆசியுரைகளும் வழங்கினாா்கள்.ஏற்புரையை வி.என் மதியழகன் நிகழ்த்தினாா்கள்.