இருப்பவர்கள் இல்லாதோரின் பசி உணர்ந்து கொடுத்து உதவுவதன் மூலம் சமூக ஒற்றுமையை நிலைநாட்டலாம் என்ற நியதிக்கேற்ப எளியோருக்கு வாரிவழங்கி ஏழையின் மகிழ்வில் திருப்தியுறும் இத்தருணம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு நன்நாளாகும்.
சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படும் இப்புனித ரமழான் மாதம் முடிகின்ற இத்தருணத்தில் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி நாம் எமது பெருநாளைக் கொண்டாட வேண்டும். முஸ்லிம்கள் இந்நாட்டில் சகல இன மக்களுடனும் சமாதானமாக வாழ்வதையே விரும்புவதோடு பிற சமயங்களுடனும் பரஸ்பர நல்லுறவுடன் ஒன்றாக கலந்திருப்பதையே குறிக்கோளாகவும் கொண்டவர்கள்.
உலகமெங்கும் குறிப்பாக எமது நாட்டிலும் இஸ்லாத்திற்கெதிராக மிகக் கவனமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வன்முறைகள் ஒழிந்து உலகமெங்கும் சமாதான தீபம் ஒளிர இந்நன்நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இத்தருணத்தில் சகல சிறப்புக்களையும் பெற்று சகோதர வாஞ்சையுடன் உறவுகள் இதமாக அனைவருடனும் மனம் மகிழ்ந்து வாழ்வதோடு, எமது நாட்டில் பெரும்பான்மை , சிறுபான்மை என்ற பேதமில்லாத தேசிய ஒருமைப்பாடு என்றென்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும் என வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
எம்.எஸ்.உதுமாலெப்பை
முன்னாள் அமைச்சர்
கிழக்கு மாகாணம்,
இணைத்தலைவர்,
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு