சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பழனி திகாம்பரம் பணிப்பபுரை


ற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அந்த வகையில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களில் அதிகளவான பெருந்தோட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் 176 குடும்பங்களை சேர்ந்த 599 மக்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளனர். அவற்றில் அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 4 முகாமகளிலும், கொத்மலையில் 5 முகாமகளிலும், நுவரெலியாவில் 2 முகாமகளிலும் மக்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரொகன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


மேலும் அனர்த்த முகைமைத்துவ அமைச்சினால் மாவட்ட செயலகங்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியினை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, உடை, தலையனை மற்றும் போர்வைகள் போன்ற பொருட்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் மாவட்ட செயலாளரகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும்; பணிப்பபுரை விடுத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -