தந்தை செல்வா நினைவு தின நிகழ்ச்சிகளும், கல்வியலாளா்கள், இலக்கிய ஊடகவியலாளா்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று(22) கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் விழா தலைவா் ஏ. சந்தனம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பிணருமான கௌரவ மாவை சேனாதிராஜா , கலந்து கொண்டாா். அத்துடன் மேல் மகாண சபை உறுப்பிணா் கே.ரீ. குருசாமி, கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கரா, தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் செயலாளா் எஸ்.கே. தளையரட்னம் பிரதிப் பொலிஸ் மா அதிபா் கே. அரசரட்ணம், பிரதித் தலைவா் மாவை வி. சோமசுந்தரம் ஆகியோறும் இங்கு உரையாற்றினாா்கள்.
இந் நிகழ்வின்போது பாடசாலை மாணவா்களுக்கு பதக்கம் அணிவிப்பு, இலவச மூக்குக் கண்னாடி வழங்குதல் ் கல்வியலாளாா்கள், சமுக சேவையாளாள்கள், இலக்கிய மற்றும் ஊடகவியலாளா்கள் பொண்னாடை போற்றி மாலை அணிவித்து விருதுகளும் வழங்கி அவா்களது சேவைகளை தந்தை செல்வா நன்பணி மன்றம் கௌரவித்தது.
இங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா -
இந்த ஆண்டுக்குள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு அதிகாரம் சுயநிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும். கணடா நாட்டில் தீபக் மக்களுக்கு சுயநிர்ணய அரசியலமைப்பு அதிகாரம் வழங்க அந்த நாட்டின் உயா் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி இலங்கை வாழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படல் வேண்டும். இதற்காகவே தந்தை செல்வா 1971எதிா்த்தாா். அவா் 67 வழக்கறிஞா்களுடன் 67 நீதிமன்றலில் தமிழ் மக்களின்உரிமைக்காக திருச் செல்வம், ஜீ.ஜீ பொன்னம்பலம் போன்ற சிறந்த வழக்கறிஞா்களுடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைக்காக வழக்காடினாா். அப்போது சிறைவாசம் அனுபவித்த இளைஞா்களுக்காக வழக்காடி அவா்களை மீட்டெடுத்தாா்.
2013ல் தமிழ்த் தேசிய ஜக்கிய முன்னணி உருவாக்கும்போது அன்று கட்சிகள் ஓன்று கூடி ஏற்படுத்தப்பட்ட அரசியல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக சிங்கள கடும்போக்காளா்கள் சிலா் நீதிமன்றலில் இவ் விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தாா்கள். அந்த வழக்கு 2017ஆம் ஆண்டில் உயா் நீதிமன்றம் ஆரய்ந்து சர்வதேச நாடுகளின் கணடா போன்ற நாடுகளில் அங்கு சிறுபான்மை தமது உரிமைககளை கேட்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதனை ஒத்தாக இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது உரிமை அரசியல் யோசனைகளை முன்வைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என இலங்கை உயா் நீதிமன்றம் அவ்வழக்கினை தள்ளுபடி செய்தது.
எமது மக்களுக்கான உரிமைகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.இல்லாவிட்டால் சர்வதேச நாடுகளின் மற்றும் ஜ.நா. மணித உரிமைகள் ஊடாக எமது உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிவரும். அண்மையில் இலங்கை வந்துள்ள மனித உரிமை பிரநிதிகள் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமரிடம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் தீா்வை வழங்காவிட்டால் நாங்கள் சர்வதேச அளுத்த்தினை தீா்ப்பினை எடுக்க வேண்டி வரும் என சொல்லிவிட்டுத்தான் போகியிருக்கிறாா்கள் என மாவை சேனாதிராஜா அங்கு உரையாற்றினாா்.