ஒன்பதாவது யொவுன்-புர இளைஞர் முகாம்


ன்பதாவது யொவுன்-புர இளைஞர் முகாமை நிக்கவரட்டியவில் வெகு கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சி எதிர்வரும் 28ம் திகதி முதல் ஏப்ரல் 1ம் திகதி வரை நிக்கவரட்டிய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறும். 'சிறப்பான எதிர்காலம் ஆரம்பம்' என்பது இவ்வாண்டுக்குரிய தொனிப்பொருளாகும். இதனை செயற்றிட்ட முகாமைத்துவ இளைஞர் அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் சங்க சம்மேளனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
இளைஞர் முகாமின் நிறைவு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த இளைஞர் முகாமில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழாயிரம் இளைஞர் யுவதிகள் பங்கேற்பார்கள். சகல இனங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் கலந்து கொள்வதால், இதற்கு தேசிய நல்லிணக்க யொவுன்-புர என்று பெயரிடப்பட்டதாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் எரந்த வெலிஅங்கே தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -