ஒண்றினைந்து தீர்வை நோக்கி புறப்படுவோம். தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம்.அதாஉல்லாஹ்





Azmy AbdulGaffoor-
ன்று நாட்டிலே இடம் பெறும் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறைகளுக்கான தீர்வை பெற அனைத்து முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டு முன் வர வேண்டும்

ஐ.தே.கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தங்களை வழங்கி அதி கூடிய பாதுகாப்புகளை வழங்கவும், ஜனாதிபதியின் தரப்பு முஸ்லீம் தலைவர்கள் அவரிடம் இந்த விடயங்கள் தொடர்பில் உரையாடி அவசரமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒழுங்குகளையும் மேற் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில் ஜனாதிபதி, ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசீம், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க பெளஸி போன்ற அரசியல் தலைவர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திய தேசிய காங்கிரஸ் தலைவர் இது தொடர்பில் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இது அரசியல் பேசுகின்ற நேரமல்ல, உடனடியாக குறித்த ஊர்களை சேர்ந்த தலைவர்கள்,பள்ளிவாசல் பிரதிநிதிகள், என அணைவரும் ஒண்றினைந்து நிதானமா காத்திரமான முடிவுகளை பெற்று சூழ் நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் மக்களை வழி நடாத்துமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம் அதாஉல்லாஹ் வேண்டு கோள் விடுத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -