கண்டி திகண சம்பவம் தொடர்பில் பிரதமர் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி



Murshid Valaichenai-
ண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக் கொள்வதாக கிராமிய பொருளாதார தெரிவித்தார்.

கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

பிரதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு இவ்வாறான நிலைமைகள் மேலும் தொடராத வண்ணம் பாதுகாப்பு தரப்பினர் நீதியான முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

வன்முறை சூழலின் பின்னணியில் திகன மற்றும் தெல்தெனியவில் பள்ளிவாசல்கள் சேதமுற்றிருப்பதுடன்ää முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பல தீக்கிரையாகியுள்ளன. அத்தோடு மரண ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் கணிசமான எண்ணிக்கையான வீடுகளுக்கு கல்வீச்சு இடம்பெற்றுள்ளதுடன்ää பல இடங்களில் வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிம் பகுதிகளில் போதிய அளவு சேதங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இடங்களுக்கு வன்முறையை இடம்பெறாத வகையில் உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும். அதனை விடுத்து மக்களுக்கு கண்ணீர் புகை மூலம் தாக்குதல் நடாத்துவது நல்லாட்சிக்கு உகந்ததல்ல.

எனவே அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான எதிரான போராட்டம் தற்போது கண்டி பகுதிக்கு மாறியுள்ளது. இந்த பிரச்சனை மீண்டும் நாட்டில் இடம்பெறாத வண்ணம் நல்லாட்சி அரசாங்கம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வழிசமைக்க வேண்டுவதுடன்ää இந்த நாட்டில் வாழும் அனைவரும் சகோதரத்துடன் வாழும் சூழலையும் உருவாக்க வேண்டும்.

அத்துடன் முஸ்லிம் உறவுகள் எமது நாட்டில் அமைதி ஏற்பட்டு அனைத்து இன மக்களும் சகோதரத்துடன் வாழ்வதற்கு இறைவனிடத்தில் பிரார்த்திக்குமாறும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -