எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.என்.எம்.அப்ராஸ்-
அகில இலங்கை சுகாதார சாரதிகளின் மரணம், மற்றும் வாகன விபத்து நலன் புரிச்சங்கதின் வருடாந்த பொதுக் கூட்டம் சங்கத்தின் பிராதன ஆலோசகர் சட்டத்தரணி காமேந்திர அவர்களின் தலைமையில் ( 2018 -03- 03) கல்முனை ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற நான்கு உறுப்பினர்களை கௌரவப்படுத்தியதோடு ,புதிய நிர்வகத்தெரிவும் இடம் பெற்றதுடன் நினைவுப் பொருளும் வெளியிடப்பட்டது.
இதன் அமைப்பாளர் எம்.பி.எம்.பழில் அவர்களின் முயற்சியில்
2014ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்த சங்கமாக கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் அமைப்பு இதன் அங்கத்தவர்களின் பல்வேறுபட்ட நலன்களில் அக்கறை செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.