க.கிஷாந்தன்-
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் அமர்ந்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஷவை இடமாற்றம் செய்யக்கோரியே 10.03.2018 காலை 5 மணிமுதல் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி அட்டன் பிரதான வீதியின் நடுவே இவ்வாறு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதனால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையில் இடம்பெற்று வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைத்தந்துள்ள போதிலும் நீதியை சரியாக கடைபிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்பாட்டத்தை தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்தார்.