மனோ கணேஷன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்-அட்டாளைச்சேனை பி.ச.முன்னாள் உறுப்பினர் முனாஸ்

கெளரவ அமைச்சர் மனோ கணேஷன் அவர்களே..!
நீங்களும் ஒரு இனவாதி என்பதனைத் தெளிவாகப் புரிய வைத்தமைக்கு நன்றி.

உங்களின் கேவலமான கருத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் ஆத்திரமடையாமலில்ல.
நாட்டில் சமூகம் ஒன்று ஒழுங்காக நின்மதியாக வாழ முடியவில்லை என்னும் கேவலம் இருக்கும் போது நாட்டில் சகவாழ்வுக்கு என்று ஒரு அமைச்சு நியமனம்.

அதுவும் சகவாழ்வு அமைச்சராக உங்களை நியமித்துள்ளனர்.
உங்களைப் போன்றோர்களுக்குத்தான் அந்த அமைச்சை வழங்க வேண்டும் என்று வழங்கியிருக்கிறார்கள்.

சகவாழ்வு இலங்கையில் இருக்கும் அனைத்தின மக்களுக்குமான அமைச்சு.. ஆனால் நாட்டில் பேரின வெறியர்கள் சேர்ந்து முஸ்லீம்களின் பள்ளி வாயல்களை உடைத்து தீ வைத்து எரித்து முஸ்லீம்களைக் கொலை செய்து முஸ்லீம்களின் வீடுகள் கடைகள் சொத்துக்களைக் கொள்ளையிட்டு தீயிட்டு எரித்து பல மில்லியன்களை நஸ்டமடைய வைத்திருக்கும் மிகக் கொடூரமான காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டிக்காமல் மிகக் கேவலமாக நீங்களும் அவர்களில் ஒருவராக முஸ்லீம் அடிப்படைவாதிகள் அராபிய சிந்தனையை உட்புகுத்துவதால் குழப்பம் என்று அறிக்கை விடுவது எந்தவகையில் நியாயம்.

நான் உங்களிடம் கேட்கிறேன் உங்கள் பார்வையில் முஸ்லீம் அடிப்படைவாதிகள் யார்?
எங்கே கண்டீர்கள்?
என்ன செய்தார்கள்?
உங்கள் கோயில்களை உடைத்தார்களா?
கல்லடித்தார்களா?
இடையூறு செய்தார்களா.?
ஏன் இத்தனை கேவலம் செய்த பேரினவாத வெறியர்களின் பன்சலைகள் ஒன்றுக்கேனும் லல்லடித்தார்களா?
உடைத்தார்களா?
ஏன் அநியாயமாக நடந்து கொள்கிறீர்கள்.

எங்கள் சமூகத்தின் நோக்கம் இவ்வுலகில் வாழும் காலம் நன்மை பல செய்து விட்டு மரணித்து வரும்.மறுமை வாழ்வை சிறப்பாக்கி சுவனம் என்னும் நிரந்தரமான இடத்தை அடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் வாழ்வதே.

மாறாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கலாச்சாரம் என்றால் என்னவென்று தெரியாமல் வெள்ளையர்களின் ஆடம்பரத்தில் மோகம் கொண்டு வீதிகளில் அலைந்து நடை உடை பாவனை செயல்களை மாற்றித்திரியும் உங்கள் செயற்பாடுகளையே முஸ்லீன்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா..?

உங்கள் பார்வையில் யார் முஸ்லீம் அடிப்படைவாதிகள் பாராளுமன்றில் இருக்கும் 21 முஸ்லீம் உறுப்பினர்களில் யாரையும் அப்படி பார்த்தீர்களா.?
அல்லது ஸ்ரீ.மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அடிப்படைவாதியா அல்லது அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் அடிப்படை வாதியா.?

யார் அடிப்படை வாதி என்கிறீர்கள்.
நடந்துள்ள அநியாயத்தை அட்டூழியத்தை கேவலத்தை காட்டுமிராண்டித் தனத்தை வெறிச்செயலை கோரத்தாண்டவ்வத்தை கொள்ளையிட்டதை எரியூட்டியதை கொலை செய்ததை எதிர்த்து அறிக்கை வெளியிட அல்லது அக்கொடூரர்களைக் கைது செய்யுங்கள் என்று கூற வக்கில்லாத நீங்கள் முஸ்லீம் அடிப்படைவாதிகள் அராபிய சிந்தனையை இலங்கையில் விதைக்க எத்தனிப்பதை தடுக்க வேண்டும் என்ற கேவலமான உங்களின் மட்டமான ஒரு சிந்தனையை பதிவிட்டிருப்பது உங்களை எவ்வளவு மட்டமானவர் என்பதனை எடுத்துக் காட்டுகிறது.

எனவே நீங்கள் அக்கருத்துக்காக முஸ்லீம் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வில்லை என்றால் உங்ககுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள ஏற்பாடு செய்வோம் என்பதனை தெரிவித்து விடைபெறுகிறேன்.
புரிதலுக்கு நன்றி.

எஸ்.எல்.முனாஸ்
அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -