அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டுக்கான மகளிர் தின விழா எதிர்வரும் 07.03.2026 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு-11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரதம அதிதியாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கெளரவ திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். முன்னிலை அதிதியாக தொழிலதிபரும் இலக்கியவாதியுமான பி.எஸ். செல்வரட்ணம் அவர்கள் கலந்துகொள்கிறார். கெளரவ அதிதியாக தமிழக புதுக்கோட்டை தமிழ் சங்கத் தலைவரும் கவிஞருமான தங்கம் மூர்த்தி அவர்கள் பங்கேற்கின்றார்.
இந்நிகழ்வின் பிரதான அம்சமாக “வீரவனிதையர்” என்ற மகுடத்தின் கீழ் பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு கௌரவிப்பும் நடைபெறவுள்ளது. திருமதி ஹேமலோஜினி குமரன், திருமதி பி.எம். நந்தனி தம்மிக்க, திருமதி கே. வேல்ராணி, திருமதி ஜெனிதா மோகன், திருமதி சாமலா நிரஞ்சன், செல்வி சமந்தி சந்திரசேகரம், திருமதி கே. தவமலர், செல்வி துவாரகா லக்ஷ்மி ரவீந்திரகுமார், திருமதி சாருலதா பாலகிருஷ்ணன், திருமதி காயத்ரி அரவிந்த், திருமதி பரிமளா துரைராஜ், டாக்டர் கங்கா லக்ஷ்மி, திருமதி கே. சசிகலா, திருமதி ஜெயசீலி தவராஜா, திருமதி டி. திலிபமாலா, திருமதி பி. லோகேஸ்வரி, திருமதி ராதா ஞானரெத்தினம், செல்வி வருணிக்கா சிவகுமாரன், செல்வி சாய்சக்தி சர்வி மற்றும் மெஹமட் தமீம் மரின் ஆகியோர் இவ்வாண்டு கௌரவிக்கப்பட உள்ளனர்.
மேலும், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனுடன், நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதால், மகளிரின் சாதனைகளையும் சமூகப் பங்களிப்பையும் கொண்டாடும் வண்ணம் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)


0 comments :
Post a Comment