நல்லூர் பிரதேசசபை ஆட்சி யாருக்கு?- தீர்மானிக்கும் சக்தியாக ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழு




ல்லூர் பிரதேசசபையின் இறுதி தேர்தல் முடிவின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி 04 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐங்கரநேசனின் ஆதரவுடன் களமிறங்கிய சுயேச்சைக்குழு 02 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தேக, சு.க, த.வி.கூ தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளன.

இதன்படி, ஆட்சியமைப்பதற்கு ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழுவின் ஆதரவு தேவையென்ற நிலையேற்பட்டதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சுயேச்சைக்குழுவுடன் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன்படி அந்த பிரதேசசபையில் யார் ஆட்சியமைப்பதென்பதை தீர்மானிக்கும் சக்தியாக சுயேச்சை அணி உருவெடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -