கட்சிக்கும் தலைமைக்கும் விடுக்கப்பட்ட சவால்களை இத்தேர்தலில் மக்கள் முறியடித்துள்ளனர் - நன்றி நவிலலில் பிரதி அமைச்சர் ஹரீஸ்



(றியாத் ஏ.மஜீத், அகமட் எஸ்.முகைடீன்)

ட்சிக்கும் தலைமைக்கும் விடுக்கப்பட்ட சவால்களை முறியடித்து அம்பாறை மாவட்டத்தில் அதிக ஆசனங்களைபெற்றுக்கொள்ள கட்சிக்கு வாக்களித்த போராளிகளை மெச்சுகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது நன்றி நவிலில்தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சிக்கு வாக்களித்த போராளிகளுக்கு நன்றி தெரிவித்தும்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தும் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே பிரதிஅமைச்சர் ஹரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றவும் முடியாது, மாறவும் முடியாது - நமதே கட்சி நமதே ஆட்சி என்ற தாரகை மந்திரத்தினூடாகமுஸ்லிம்களின் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்பதை மக்கள் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்முடிவுகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ள வாக்களித்த கட்சியின்கல்முனை, மருதனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் ஆதரவாளர்கள், போராளிகள் குறிப்பாக தாய்மார்கள்,சகோதரிகளுக்கு விசேடமான நன்;றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் சாய்ந்தமருதில் கட்சிக்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவின் போதும் தேர்தல் களத்தில் நின்று கட்சியின்வெற்றிக்காக போராடிய வேட்பாளர்களையும் கட்சிக்காக வாக்களித்த போராளிகளையும் பாராட்டுகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் ஆகிய சபைகளில்பெரும்பான்மை ஆசங்களையும் அக்கரைப்பற்று, காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய சபைகளில் கூடுதல்ஆசனங்களை பெற்றுக்கொள்ள வாக்களித்த கட்சியின் போராளிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கட்சி பெரும்பாலான சபைகளை வெற்றி கொண்டுள்ளதுடன் வடக்கு மற்றும் வட-கிழக்கிக்கு வெளியிலுள்ள சபைகளிலும் கூடுதலான ஆசனங்களை கட்சி பெற்று உள்ளுராட்சி மன்றங்களின்ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் மாறியுள்ளது. இதன்மூலம் கட்சியின் இருப்பையும் தலைமையையும்மக்கள் பாதுகாத்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு தங்களது வட்டார மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையைக் கொண்டு மக்கள்வேண்டி நிற்கும் சகல மக்கள் நலபணிகளை செய்து கொடுக்க திடசங்கப்பம் பூணவேண்டும்.

எதிர்காலத்தில் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்ற அபிவிருத்தி பணிகளை முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச வேறுபாடின்றிபுதிய உத்வேகத்துடன் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -