ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபையினுடைய வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அமோக வேறியடந்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சையில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக SLFP, TULF,TNA போன்ற கட்சிகளினுடைய உறுப்பினர்கள் ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.
மேலும் தனது கருத்தினை குறித்த விடயம் சம்பந்தமாக தெரிவித்த உதுமான் கண்டு நாபீர்…. முஸ்லிம் காங்கிரசினை விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கோடு முழு அம்பாறை மாவட்டத்திலும் பீரங்கி பேச்சாளராக மாறிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தனது சொந்த ஊராகவு தனது அரசியல் கோட்டையாக கூறிக்கொள்லும் ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் படுதோல்வியினை சந்தித்துள்ளமையானது எதிரே வருகின்ற தேர்தலில் முழு கல்குடாவுமே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக மாறிவிடும் என்றஉண்மையான வெள்ளோட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே அமைந்திருக்கின்றது.
ஆகவே ஓட்டமாவடி பிரதேச சபையின் வரலாற்றில் இது வரைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அதிகாரத்தினை செலுத்த முடியாமல் இருந்துள்ளமை முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியலில் ஒரு முக்கிய விடயமாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் நம்பிக்கையாளர் சபை தெரிவு என்ற விடயத்தில் இம்முறை ஒட்டு மொத்த ஓட்டமாவடி ஜமாத்தார்களின் மறுமலர்ச்சிக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசிற்கு வரலாற்றில் அழிக்க முடியாத வெற்றி கிடைத்துள்ளது.
எனவே குறித்த வெற்றியினை வைத்து ஊழலற்ற பிரதேச சபையாக ஓட்டமாவடி பிரதேச சபையினை மாற்றி அமைக்கும் பொருட்டு மறுபக்கத்திலே.. கல்குடாவிற்கான முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், கடந்த பாராளுமன்ற வேட்பாளருமான இருக்கின்ற கணக்கறிஞர் றியாழினுடைய அயராத முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியினை வைத்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படுகின்ற ஒரு சில ஆசனங்களை SLFP,TNA, TULF, போன்ற கட்சிகள் வழங்கி தங்களது மானசீக ரீதியான உதவியினை முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்குவது காலத்தின் கட்டாய கடமை என்பதனை நாபீர் பெளண்டேசன் தெளிவுபடுத்துகின்றது என பொறியலாளர் உதுமான் கண்டு நாபீர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.