ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. அலிஸாஹிர் மௌலானா (20) இரவு 10.30 மணியளவில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம். ஹனீபா அவர்களை ஊர் பிரமுகர் ஒருவரின் துணையுடன் சந்தித்துள்ளார்.
தலைவரின் வீட்டில் முன்னறிவிப்பு இன்றி இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பா.உ. கல்முனை மாநகரசபைக்கான ஆட்சி அமைப்பது தொடர்பில் தாம் பேச வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்க்கு பள்ளித் தலைமை, எமது முதலாவதும் இறுதியுமான கோரிக்கை தனியான நகர சபை மாத்திரமே. அதனைப் பெற்றுத் தருபவர்களுக்கே எமது ஆதரவு வழங்கப்படும் என மிக அழுத்தமாக தெரித்துள்ளார்.
அதனை தாம், தமது தலைமையிடம் தெரியப்படுத்துவதாக பா.உ. கூறிச் சென்றுள்ளார்.