வாக்களிக்க விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


காரைதீவு நிருபர் சகா-

ள்ளூராட்சி மன்றத் ​தேர்தலில் வாக்களிக்கவுள்ள தனியார்துறை உழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் இரண்டு மணித்தியாலங்களுக்கு குறையாத கால அளவிலான விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

கடமை புரியும் இடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லவெண்டிய தூரம்

40 கிலோமீற்றர் அல்லது அதனிலும் குறைவு - 1/2 நாள்
40 - 100 கிலோமீற்றர் - 01 நாள்
100 - 150 கிலோமீற்றர் - 1 1/2 நாள்
150 கிலோமீற்றருக்கு அதிகம் - 02 நாட்கள் விடுமுறை வழங்கப்படுதல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று திரும்பி வருவதற்கு ஆகக்கூடியது மூன்று நாட்கள் தேவைப்படும் என்பதனால் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மூன்று நாட்கள் விடுமுறை வழங்க வெண்டியதனை கவனத்திற் கொள்ளுமாறும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இந்த விசேட விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக ஊழியர்கள் தொழில் வழங்குனருக்கு எழுத்துமூலம் கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் வழங்கப்படும் விடுமுறைகளின் கால அளவு தொடர்பான பட்டியல் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -