சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம் தகவல்!
காரைதீவு நிருபர் சகா.சம்மாந்துறைவலயத்தில் 01.01.2018முதல் வழங்கப்படவிருந்து தேர்தல் ஆணையாளரின் சுற்றுநிருபத்திற்கமைவாக பிற்போடப்பட்ட சகல ஆசிரியர் இடமாற்றங்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்குவருகின்றன என்று சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தெரிவித்தார்.
இதன்படி வலயத்திற்குள் 170 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்குள்ளாகின்றனர். அவர்களுள் சம்மாந்துறை-இறக்காமம் ஒப்பந்த இடமாற்றத்தின்படி 26ஆசிரியர்கள் பரஸ்பரம் இடமாற்றத்திற்குள்ளாகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளரின் சுற்றுநிருபத்திற்கமைவாக மேற்படி ஆசிரியர் இடமாற்றம் கடந்த 1.1.2018 முதல் 1.3.2018 வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நிறைவடைந்த காரணத்தினால் 2.3.2018முதல் மீண்டும் இவ்விடமாற்றம் அமுலுக்கு வருகிறது என்றார்.
இதற்கென பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பிவைக்கப்படமாட்டாது.முன்னைய பிற்போடப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இவ இடமாற்றம் மீண்டும் அமுலுக்குவருகிறபடியினால் மார்ச் 2இல் அவரவர் புதியபாடசாலைக்குச்சென்று அறிக்கையிடவேண்டும் என பணிப்பாளர் நஜீம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மேன்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பம் தொடர்பில் நேற்றுமுன்தினம் மேன்முறையீட்டு இடமாற்றசபைக்கூட்டம் நடைபெற்றது.
மேன்முறையீடு செய்தவர்களுள் 26பேரின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 17பேரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடு செய்தவர்களுள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அதே பாடசாலையில் தொடர்ந்து கடமையாற்றலாம். நிராகரிக்கப்பட்டவர்கள் புதிய பாடசாலைக்குச் செல்லவேண்டும்.
மேன்முறையீடு செய்தவர்களுக்கு பதில் கடிதம் இவ்வாரம் அனுப்பிவைக்கப்படுமென்று அவர் கூறினார்.