அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை ஏ 15 பிரதான நெடுஞ்சாலையில் கிண்ணியா பாலத்திற்கு சமீபமாகவுள்ள கிண்ணியாவில் அமைக்கப்பட்டிருக்கும் கிண்ணியா, வரவேற்நுக்கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மணிக்கூடுகள் செயலிழந்து நீண்டகாலமாகியும் இன்னும் இவ் வரவேற்புக்கோபுரத்திலுள்ள மணிக்கூடுகள் புனரமைக்கப்படாது பிழையான நேரத்தினை காட்டுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம், இவ் வரவேற்புக்கோபுரத்தினை கடந்துசெல்வோர்கள் இவ் வரவேற்புக்கோபுரத்திலுள்ள மணிக்கூட்டினை பார்த்து பிழையான நேரத்தினை அறிந்துகொண்டு செல்லவேண்டியுள்ளது
மேலும் இவ் இடத்திற்கு அருகில் பாடசாலை மற்றும் கிண்ணியா பாலம் பொது விளையாட்டு மைதானம் என்பனவும் அமைந்திருப்பதாலும் தினமும் கிழக்கு மாகாணம் முழுவதற்கும் இவ் வீதியூடாக நாளாந்தம் பயணிக்கும் மக்களுக்கும் இதனைக் கடந்து பயணிப்பதால் இவ்விடம் அனைவருக்கும் மிக முக்கியமானதொரு இடமாகும்.
எனவே கிண்ணியா வரவேற்புக்கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மணிக்கூடுகளினைப் புனரமைத்து சரியான நேரத்தினை காட்டக்கூடியவிதமாக இதனை திருத்தியமைத்தால் மக்கள் மகிழ்ச்சியடைவதோடு சரியான நேரத்தினை அறிந்துகொண்டும் செயற்பட வாய்ப்பு ஏற்படும்
எனவே உரிய அதிகாரிகள் இதனை திருத்தியமைக்க கவனம் செலுத்தவேண்டுமென்பதே பொதுமக்களினது கோரிக்கையாகும்.