இந்த வட்டாரத் தேர்தல் முறைமை எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு பரீட்சைக் களமாக மாறியிருக்கின்றது. அமைச்சர் றஊப் ஹக்கீம்



 (பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸில்)
முன்பிருந்த தேர்தல் முறையிலும் பார்க்க தற்போதுள்ள வட்டாத்தேர்தல் முறையின் வித்தியாசத்தை நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் இத்தேர்தலிலே விபரீதங்கள் நடந்து விடலாம் எனவேதான் நாங்கள் கட்சிசார்பிலே இன்று முரண்பட்டுக்கொண்டு களமிறங்கியிருக்கின்ற ஒரு சிலருக்கு அச்சுறுத்தலாக நான் சொல்லி வைத்திருக்கின்றேன் என அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைத்தேர்தலில் போட்டியிடும் 2ஆம் வட்டார வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,3ஆம் வட்டார வேட்பாளர் ஏ.ஆர் அமீர்,4ஆம் வட்டார வேட்பாளர் எம்.எஸ்.உமர் அலி,ஏ.எல்.எம்.முஸ்தபா ஆகியோரை ஆதரித்து மருதமுனை பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை(14-01-2018)நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் ஏ.ஆர்.ஏ.சத்தார் ஜே.பியின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.இங்கு பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உள்ளீட்ட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் றஊப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-இந்த விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட்டு நீங்கள் கட்சியைத் தோற்கடித்துவிடக்கூடாது.கடந்த தேர்தல் முறையிலே ஒரு வாய்ப்பிருந்தது. அந்த முறையிலே எங்களுக்கு ஆளோடு கோபமென்றால் அவரது இலக்கத்திற்கு விருப்பு வாக்கினைப் போடாமல் வேறுயாருக்காவது போட்டுவிட்டு அவரைத் தோற்கடித்துவிட்டு கட்சிக்கு வாக்களித்து கட்சியை வெற்றிபெறவைக்கலாம்.

ஆனால் இந்தத் தேர்தலில் வேட்பாளரைத் தோற்கடிக்கப் போனால் கட்சியும் தோற்றுப் போகிற ஒரு பாரிய பிரிச்சினை இருக்கிறது.அதனால் எல்லாக் கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் ஒருபரீட்சைக் களமாக மாறியிருக்கின்றது.அதனை அடிப்படையாக வைத்து இந்தத் தேர்தல் முடிந்த கையோடு பாராளுமன்றத்திலுள்ள எல்லாக் கட்சிகளும் சேர்ந்து இந்தத் தேர்தல் முறையை மீண்டும் மாற்றியமைத்துக் கொள்வோமோ என்று சிந்திக்கிற அளவிற்குக் கூட வருகிறார்கள்.

இந்த நிலையில் கரைவாகு மேற்கு என்ற தனியான பிரதேசசபையும் அமைய வேண்டியதேவைப்பாடு தமிழர்களின் தேவைப்பாடாக இருக்கப்போகிறது அவ்வாறு இருக்கிறபோது நற்பிட்டிமுனை மக்கள் இன்னுமொரு பிரதேசசபையின் ஆட்சிக்குள்ளே உள்வாங்கக்கூடிய நிலவரங்கள் ஏற்பட்டுவிடலாம் என்ற ஆபத்தும் இருக்கிறன்றது. இந்த ஆபத்துக்களையெல்லாம் அடிப்படையாக வைத்து இதற்கான தீவுகளைப்பற்றி சிந்திக்கிறபோது இவற்றில் மாற்றங்களை செய்யலாமா? எங்கிருந்து எல்லையைப் போடலாம். கல்முனை மாநகரை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம்? என்றெல்லாம் சிந்திக்கிறபோது அது சம்மந்தமான பேச்சவார்தைகளிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளையும் அழைத்து பேசவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆனால் இவைகளெல்லாம் காலம் காலமாக இருக்கிற பிரச்சிகைகளை இரவோடு இருவாக தீர்து வைத்துக் கொள்ள முடியும் என்று ஒரு சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சி பலவந்தப்படுத்தபட்டு பலவிதமான உத்தரவாதங்களைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டது.ஆனால் அந்த நிர்ப்பந்தங்களின்பால் கொடுப்பப்ட்ட வாக்குறுதியும்கூட நாங்கள் நிறைவேற்றித்தான் தரவேண்டும் என்ற விருப்பத்தோடும் இருந்தபோதும் நாங்கள் எதிர்பாராத புரத்திலே இருந்து எதிர்ப்புக்களைத் திரட்டியது மாத்திரமல்ல அதற்குப் பின்னாலே சில மாற்றுக் கட்சிக்காரர் குளிர்காய முற்படுவதோடு இந்தக் கட்சியைப் பலவீனப் படுத்துவதற்காக இந்தப் பிரச்சனைகளை வேறுயாரோ செய்வது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இன்று பள்ளிவாயல்களைக்கூட இதில் சம்மந்தப்படுத்தி அதைத் தங்களால் பெற்றுத் தரமுடியும் என்றபாங்கிலே இந்தப்பிரச்னைக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இதை எமது பிரதேச இனநல்லுறவிற்கு குந்தகமில்லாத ஒன்றாக இதிலுள்ள சிக்கல்களைக் கழைந்து தாமதமானாலும் இதை நாங்கள் தீர்த்தெடுக்க வேண்டும்

இன்று முஸ்லிம் காங்கிரஸுடைய பெயரை வைத்துக் கொண்டு ஒரு சிலர் அரசியல் செய்ய முற்படுகிறார்கள் இந்த வேலிகளை உடைத்து முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை அந்த மண்ணிலே உறுதிப்படுத்துகிற தலைமைத்துவமாக நாங்கள் இருப்போம் என்பதை திட்டவட்டமாக நான் சொல்லிக் கொள்கின்றேன்.அக்கரைப்பற்றில் இருந்த சதிவேலைகளையெல்லாம் நாங்கள் உடைத்து தற்போது அங்க பாரிய பொதுக்கூட்டங்களை நடாத்தி இருக்கின்றோம். அக்கரைப்பற்றின் பிரதேசசபையின் அட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என்பது மாத்திரமன்றி அக்கரைப்பற்றின் மாநகரின் ஆட்சியையும் கைப்பற்றிவிடும் என்கிற அச்சத்தை நாங்கள் அங்கே ஏற்படுத்தி இருக்கிறோம்.

அதேபோன்று கோரளைப்பற்றுமேற்கு ஓட்டமாவடி பிரதேசசபை ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் நிறுத்தியிருக்கிற அணி நிச்சயமாக கைப்பற்றும் என்பதற்கு சாட்சியம் கூறுகிற மாபெறும் கூட்டத்தை நடாத்திவிட்டுத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். எனவேதான் நாங்கள் கல்முனை மாநகரை அதிகூடிய வாக்ககளைக் கைப்பற்றும் என்பதில் இங்களுக்கு இந்தவிதமான ஐயப்பாடுமில்லை.

அதிவேகமாக அபிவிருத்தி அடைந்துள்ள மருதமுனைக் கிராமமானது பண்டிகைக் காலங்களில் நெரிசல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது இந்தப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாங்கள் பிரதான வீதியுடன் இணைந்த இன்னுமொரு மாற்றுவீதியை மேட்டுவட்டையூடாக அமைத்து கல்முனையினூடாக மாவடிப் பள்ளியினூடே கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

இதற்காக நீங்கள் எங்களுக்கு கல்முனை மாநகரத்திற்கான அதிகாரத்தை எங்கள் கரங்களில் தரவில்லை என்றால் எந்த அபிவிருத்தியையும் செய்யமுடியாத ஒரு சிக்கல் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுவிடுவோம்.கடந்த காலங்களில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களால் இந்தப் பகுதிக்கு நிறையவே அபிவிருத்திப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.மருதமுனைப் பொது நூலகம் 60 மில்லியன் ரூபாய் செலவில் அதனை திருத்தி அமைக்கும் நல்லதொரு கேட்போர் கூடத்தோடு அந்தப் பொது நூலகம் மாற்றிமைக்கப்படவிருக்கிறது.

அத்தோடு பிரான்சிற்றியிலே முழுவடிகான் தொகுதி அமைத்து அதற்கும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்து புதிய குடியேற்றங்கள் நடந்த பிரதேசங்களிலே பாரிய மாற்றங்களை செய்து வருகிறோம்,கடற்கரைப் பிரதேசத்திலே சிறுவர் பூங்காவை அமைக்க என்னுடைய அமைச்சினூடாக பாரிய நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளேன். இந்த வருடம் கல்முனை சம்மாந்துறை மாநகரங்களுக்கென்று மாத்திரம் கிட்டத்தட்ட ஆயிரம் மில்லியன் ரூபாய்களை நாங்கள் செலவிட இருக்கிறோம்.அதில் ஒரு கணிசமான பங்கினை மருதமுனை அபிவிருத்திற்கென்று ஒதுக்குவதென்று நாங்கள் தீர்மானம் எடுத்திருக்கிறோம்.

வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பாக கல்முனை அபிவிருத்திகென்று மாத்திரம் அரசாங்கத்தின் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பாக மாநகரத் திட்டதிற்கென்று மாத்திரம் இவ்வாறனதொரு பெரிய தொகை இதுவரைக்கும் ஒதுக்கப்படாத தொகையை கல்முனை மாநகருக்கென்று என்னுடைய அமைச்சிலிருந்து பிரத்தியேகமாக ஒதுக்கியிருக்கின்ற சூழலிலேதான் கல்முனை மாநகரின் ஆட்சியை மீண்டும் எங்களுடைய கரங்களில் நீங்கள் தரவேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம் என்றார்.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -