தமிழ்மக்களை அடகுவைத்து கோடிகளை பெறும் கூட்டமைப்பிற்கு காரைதீவான் பதிலடி கொடுப்பான்.




காரைதீவு நிருபர் சகா-
காலம் காலமாக தமிழ்மக்களின் ஆணையோடு ஆட்சிபீடம் ஏறி தனது கதிரைகளை அலங்கரிக்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னை ஆதரித்த மக்களை பல கோடிகளுக்கு விற்று பிழைப்பு நடாத்துகின்றது. இதற்கு இந்தத்தேர்தலில் தமிழ்மக்கள் நல்ல பதிலை வழங்குவார்கள்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தேர்தலில் போட்டியிடும் மீன்சின்ன வேட்பாளர் கே.குமாரசிறி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
2015 ம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசின் பங்காளியாகி அவ்வரசிற்கு முட்டுக்கொடுத்து வருகின்றது. கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கி அதற்கு சன்மானமாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தலா இரண்டு கோடியை பெற்றதை இன்று சந்தி சொல்கின்றது.
அவ்வாறு நாங்கள் பெற்றிருந்தால் அதை மக்களுக்காகவே பயன்படுத்தியிருப்போம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் சாக்குப்போக்குடன் ஒப்புக்கொள்கின்றார். கடந்த இரண்டு வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வீரத்தோடு பேசிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் இந்த கோடிளை பின்கதவால் பெற்றுக்கொண்டதாலே அதற்கு ஆதரவாக வாக்களித்தார்.

அந்த பணமே இப்போது இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சாராயபோத்தல் வடிவில் காரைதீவு மண்ணின் புனிதத்தை சீரளிக்கின்றது. கடந்த கிழக்கு மாகாணசபையிலும் கொண்டுவரப்பட்ட மாகாணசபையின் அதிகாரங்களை குறைக்கின்ற இருபதாவது திருத்தத்திற்கும் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அறியாமலே கூட்டமைப்பினர் ஆதரவாக செயற்பட்டனர்.

எங்களை நாங்களே ஆளக்கூடிய தமிழ்மக்களுக்கென இருக்கின்ற அதிகூடிய அதிகாரமே இந்த மாகாணசபை முறைமையாகும். இவ்வாறு தேசிய அரசியலிலே அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கி அவர்களின் வங்கி நிலுவையை உயர்த்தினாலும் இந்த உள்ளூராட்சி மன்றத்திலே இவர்களின் இந்த விசப்பல்களை காரைதீவான் களற்றுவான் என்பது உறுதியாகும்.

அதற்கு காரைதீவு மக்களின் கரங்கள் ஓங்கவேண்டும். தமது வாக்குபலத்தினூடாக இந்த கூட்டமைப்பினரின் கோடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் காரைதீவு பிரதேசசபையின் ஆட்சியை மீன் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவிற்கு வழங்கவேண்டும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -