சாய்ந்தமருது ரியல் பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சினேகபூர்வ உறவை வலுப்படுத்தும் நோக்கில், Regency Motors (Pvt) Ltd நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ள ரீஜென்சி டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நேற்று சாய்ந்தமருது சீ பிரீஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
ரியல் பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் ஏ.எம். பயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழகத்தின் பயிற்றுவிப்பாளரும் விளையாட்டு உத்தியோகத்தருமான எம்.வி.எம். றஜாய், முன்னாள் அணித் தலைவரும் ஆசிரியருமான ஏ.என்.எம். ஜலூத், பொருளாளர் ஆர்.எம். இம்தாத், அணித் தலைவர் ஆபாக், உப செயலாளர் ஏ.என்.எம். ஜாவித் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியில் பிரதேசத்தின் முன்னணி 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கவுள்ளன. அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
சுற்றுப்போட்டியின் அனைத்து ஆட்டங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










0 comments :
Post a Comment