கல்வியின் மூலம் மாணவர்களின் எதிர்காலம் உள்ளது மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் நிச்சயமாக உரிய விமோசனம் கல்வி தான் உள்ளது என கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தலைமையில் இன்று (20/7/2026) திங்கள்கிழமை இடம்பெற்றபோது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், இன்று பெண் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவதை காணமுடிகிறது ஒரு காலத்தில் ஆண் மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் அடைந்து காணப்பட்டனர் இன்று பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ளது ஆண் மாணவர்கள் கல்வியில் அதிக கரிசனை செலுத்த வேண்டும் மேலும் பெண்களும் கல்வியின் மூலம் முன்னேற வேண்டும்.
கல்வி எனபது மிக முக்கியமானதொன்றாகும். ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் ஆசிரியர்கள் இங்கு பல எதிர்கால தலைவர்கள் பலர் உள்ளனர். எனது தந்தை மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் பற்றி பேசினார்கள் அன்று அவர் எதாவது ஒரு வேலைத் திட்டங்களை செய்து இந்த சமூகத்தை கல்வித்துறையில் கல்முனை என்றால் அடையாளமாக விளங்கியது.
அரசியலுக்காக நான் சேவை செய்யவில்லை இது எனது மண் எனது மக்கள் இங்கு சேவை செய்வது எனது கடமை என்னால் முடிந்த வரை கல்விக்கு என்றும் உதவ தயாராக உள்ளேன். கல்வியில் மாணவர்கள் அதிக கரிசனை செலுத்த வேண்டும்.
மாணவர்கள் கற்று விட்டு பாடசாலையை மறக்க கூடாது நாம் முடியுமான வரை பாடசாலைக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். எமது வீட்டுக்கு எமது சமூகத்துக்கும் நாட்டுக்கும் மாணவர்கள் பிரயோசனம் மிக்கவராக திகழ முன் வர வேண்டும் என்றார்.
பாடசாலை தேவைப்பாடுகள் குறித்து ரஹ்மத் பௌன்டேஷனுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய,ஸ்ரீலங்கா யங் விமென் முஸ்லிம் அசோசியேஷன் (YWMA) அனுசரணையில் கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் மற்றும் கெளரவ அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா யங் விமென் முஸ்லிம் அசோசியேஷன் (YWMA) அமைப்பின் தலைவி பவாஷா தாஹா ஆகியோர் இணைந்து பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரத்தை வழங்கி வைத்தனர்.
மேலும் இதன் போது ஸ்ரீலங்கா யங் விமென் அமைப்பின் உப தலைவி சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்,பொருளாளர் கனீஸ் மலிக் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.வை. எம். சாதிக்,உதவி அதிபர் இசட். நி.சியாம் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,நலன் விரும்பிகள்,மாணவர்கள் மற்றும் பெளன்டேசனின் உறுப்பினர்கள் ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.
அத்துடன் கல்வி பொது தர பரீட்சையில் சிறந்த பெறுபெறு பெற்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர் தரத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வாய்ப்பு பெற்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. மேலும் பாடசாலை சமூகம் சார்பில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அம்பாரை மாவட்டத்தில் ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேஷன் அமைப்பானது குறிப்பாக பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் பொது மக்கள் நலன் சார் உதவிகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment