தலவாக்கலை பி.கேதீஸ்-
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வட்டகொடை பிரதேசத்தில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி சார்பில் கைத்தொலைபேசி சின்னத்தில் வேட்பாளராக பாலச்சந்திரன் ஹருண் போட்டியிடுகின்றார்.
இவர் வட்டகொடை யொக்ஸ்போட் தோட்டத்தில் வசிக்கும் பாலச்சந்திரன் வெண்ணிலா ஆகியோரின் இரண்டாவது பிள்ளையாவார். வுட்டக்கொடை யொக்ஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பக் கல்வியை யொக்ஸ்போட் தமிழ் வித்தியாலத்திலும் இடைநிலை கல்வியை கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலத்திலும் கற்றார்.
இம்முறை இடம்பெறுகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை பிரதேச சபைக்கு வட்டக்கொடை தொகுதியில் 475 டீ கிராம சேவகர் பிரிவில் ஹொலிரூட் கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு,வட்டக்கொடை கீழ்பிரிவு,வட்டக்கொடை நகர் மற்றும் வட்டக்கொடை கொலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி போட்டியிடுகின்றார்.
