இந்த நிகழ்வு மத்ரஸாவின் தலைவர், ஓய்வு பெற்ற மேலதிக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம், பொறியியலாளர் அல்ஹாஜ் எஸ்.எல். முஹம்மட் அலியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபேவிக்கிரம, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் (MMC) ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அத்துடன், பிரபல உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஹாபிழ்களை கௌரவித்தனர்.
நிகழ்வின் போது, ஹிப்ழுல் குர்ஆன் கல்வியை சிறப்பாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், குர்ஆன் மனனப் பயிற்சியில் சிறந்து விளங்கிய ஹாபிழ்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
உரையாற்றிய அதிதிகள், ஹிப்ழுல் குர்ஆன் கல்வி இஸ்லாமிய சமுதாயத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும், ஒழுக்கப் பண்பாட்டிற்கும் அடித்தளமாக அமைகிறது எனக் குறிப்பிட்டதுடன், தாறுல் ஹக் மத்ரஸா இத்துறையில் மேற்கொண்டு வரும் சேவைகளை வெகுவாக பாராட்டினர். மேலும், இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு சமூகத்தின் முழுமையான ஆதரவு அவசியம் எனவும் வலியுறுத்தினர்.
மாணவர்களின் குர்ஆன் ஓதல்கள், மார்க்க உரைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இவ்விழா ஆன்மீக எழுச்சியுடனும், கண்ணியத்துடனும் நிறைவடைந்தது.





















0 comments :
Post a Comment