"அரசாங்கம் என்ற வகையில் நாம் 3 வருடங்களாக நாங்கள் செய்த விடயங்களுக்காக மகிழ்ச்சியடைகிறோம். அதிலும் அரசாங்க நிர்வாக அமைச்சர் என்ற வகையில் அதிகமாக மகிழ்கிறேன். காரணம், அரச சேவைக்காக செய்த செயற்பாடுகளுக்காகவாகும். விசேடமாக ஐக்கிய தேசிய கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடும் போது சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் ஐதேக ஆட்சிக்கு வந்தால் அரச சேவை அவ்வளவு தான் என்று அரச ஊழியர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் கூறி வந்தார்கள். ஆயினும் நாம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்களில் அரச சேவையை சுயாதீனமானதும், கௌரவமானதுமானதாக ஆக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அத்துடன் நீண்ட கால கோரிக்கையான அடிப்படை சம்பள அதிகரிப்பை நாம் செயற்படுத்தினோம். அதற்காக ரூபா 10 000 சம்பள அதிகரிப்பை நாங்கள் செய்து பின்னர் படிப்படியாக அதனை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுத்தோம். பலருக்கு கடன் பெறும் வாய்ப்பு இதன் மூலம் அதிகமாகிறது.
இந்த விடயங்கள் விமர்சிப்பவர்களுக்கு விளங்குவதில்லை. மறுபுறம் ஓய்வுதியம் பெறுபவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தோம். அத்துடன், அரச சேவைக்கான உள்வாங்கள்களை நேர்மையாக மட்டுமன்றி அரசியலின் கையில் இருந்த அரச சேவைக்கு நாம் விடுதலையை வழங்கினோம்.

முக்கியமாக அரசியல்வாதிகள் கூறுவதற்கெல்லாம் "யெஸ் சேர்" சொன்ன அரச ஊழியர்களுக்கு சுய கௌரவத்தையும் வழங்கினோம். இதற்காக நான் அரசாங்க நிர்வாக அமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அமைச்சர் தெரிவித்தார். அரச ஊழியர்களுக்காக கட்டப்பட்டு வரும் "நில பியச" வீடமைப்புத்திட்டத்தின் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்வதற்கான கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இணைந்த சேவைகள் பிரிவுக்கு உட்பட்ட அரச ஊழியர்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதனால் பல ஊழியர்கள் சிரமப்படுவார்கள். பிரதான பிரச்சினை வதிவிடமாகும். அதற்குத் தீர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் ஆலோசனையின் படி உருவானதே "நில பியச" வீடமைப்புத்திட்டமாகும். இதன் கீழ் இணைந்த சேவைகள் பிரிவின் மேல் நிலை ஊழியர்களின் வதிவிடப்பிரச்சினைகளுக்குத் தீர்ப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தினது ஊழியர்களுக்கான வீடமைப்புத்திட்டம் களனி பிரதேச செயலகத்தின் அருகில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டத்தின் பெறுமதி ரூபா 300 மில்லியன்களாகும். அதில் 32 வீடுகள் அமைக்கப்படும். அதே போன்று மொனராகலை மாவட்டத்திற்கான திட்டம் பழைய மாவட்ட செயலகத்தின் அருகில் அமைக்கப்பட்டு வருவதுடன், அதற்காகவும் ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலன்னறுவை மாவட்டத்திற்கான வீடமைப்புத்திட்டம் ஹிங்குரக்கொடையில் ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், கொழும்பு மாவட்டத்திற்கான வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.
கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் உரையாற்றும் போது, "இங்கு அரச சேவையில் பெரியதொரு பாரம் இருக்கும் நிலையில், கிராம முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்கள், வீடமைப்புத்திட்டங்கள், கிராமிய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன. நாங்கள் இன்று ஆரம்பித்திருக்கும் இவ்வேலைத்திட்டமானது துரிமாக செயற்படுத்தப்படவேண்டிய ஒன்றாகும். இத்திட்டத்தின் ஆரம்பத்தில் மேல் நிலை ஊழியர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்ட பின்னர், ஏனைய ஊழியர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும். அடுத்தது இத்திட்டம் முழுமையடையவும் வேண்டும். மற்றும் பாதுகாப்பு மத்தியஸ்தானம், வியாபார நிலையம், உடற்பயிற்சி நிலையம் என்பனவும் அமைக்கப்படவேண்டும். அத்துடன் நிதி மோசடிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி உள்ளிட்ட ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.